தமிழக செய்திகள்

டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அண்ணா சாலை, பெசன்ட் நகர், தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தி.நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல  சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். 

தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 2 வாகனங்களில் வந்த 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்