சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒமென் நாட்டு தலைநகர் மஸ்கட்டிற்கு செல்ல 154 பயணிகள் தயாராக இருந்தனர். பயணிகள் ஏறும் முன் விமானி எந்திரங்களை சோதனை செய்தார். அப்போது விமானத்தில் எந்திர கோளாறு இருந்ததை கண்டு பிடித்தார். உடனே விமான தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து ஏந்திர கோளாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பயணிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் பயணிகள் அவதியுற்றனர். எந்திர கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் 4 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.