தமிழக செய்திகள்

திருத்தணியில் தந்தை கண்டித்ததால் என்ஜினீயர் தற்கொலை

திருத்தணியில் தந்தை கண்டித்ததால் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் துரைராஜ் என்கின்ற வெங்கடேசன் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான வெங்கடேசன் படிப்பு முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இதனை அவரது தந்தை மணி கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த வெங்கடேசன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கையை பிளேடால் அறுத்து கொண்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் அவரது உடலை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு