தமிழக செய்திகள்

என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி

சரவணம்பட்டி

கோவை விமான நிலையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் விவசாயி. இவருக்கு காளப்பட்டி- குரும்பபாளையம் செல்லும் சாலையில் தோட்டம் மற்றும் வீடு உள்ளது. இவரது மகன் குணசுந்தர் (வயது28). இவர் கோவையில் என்ஜினீயரிங் படிப்பு முடித்து மேல் படிப்புக்காக கடந்த 2016-ம்ஆண்டு ஆஸ்திரேலியா சென்றார். ஆனால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கோவைக்கு திரும்பி வந்துள்ளார்.

இதனால் மனவருத்தத்தில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதற்காக மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையில் குணசுந்தரின் மனமாற்றத்திற்காக அவரது தந்தை குரும்பபாளையத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு அழைத்துவந்து தங்கியிருக்க செய்துள்ளார்.

இந்தநிலையில் வீட்டுக்கு வந்த குணசுந்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு