தமிழக செய்திகள்

தக்கலை அருகே குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு

தக்கலை அருகே குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார். உறவினர் வீட்டின் கிரகபிரவேஷத்திற்கு வந்த போது இந்த சோகம் நடந்தது.

தக்கலை:

தக்கலை அருகே குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார். உறவினர் வீட்டின் கிரகபிரவேஷத்திற்கு வந்த போது இந்த சோகம் நடந்தது.

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்

தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சிநாதபிள்ளை (வயது 53). இவர் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் அதிகாரியாக உள்ளார். இதனால் அவர் தஞ்சாவூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், கணேஷ் ராஜா (21) என்ற மகனும் இருந்தனர்.

கணேஷ் ராஜா என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் உறவினர் வீட்டு கிரகபிரவேஷத்திற்காக நேற்று முன்தினம் குடும்பத்தோடு மீனாட்சிநாதபிள்ளை பத்மநாபபுரம் வந்தார்.

குளத்தில் மூழ்கி சாவு

உறவினர் வீட்டு கிரகபிரவேஷம் நேற்று காலையில் நடந்தது. அதன்பிறகு மாலையில் பத்மநாபபுரத்தில் உள்ள பெருமாள்குளத்தில் கணேஷ் ராஜா மற்றும் உறவினர்கள் குளிக்க சென்றனர். கணேஷ் ராஜாவுக்கு நீச்சல் நன்றாக தெரியும் என்பதால், குளத்தில் நீண்டதூரம் நீந்தி சென்றுள்ளார்.

மீண்டும் குளத்தின் கரைக்கு திரும்பிவரும்போது உடல் சோர்வடைந்து திடீரென குளத்தில் மூழ்கினார். இதை கண்ட உறவினர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சல் போட்டனர். உடனே ஊர் மக்கள் அங்கு திரண்ட னர். அதில் சிலர் குளத்தில் குதித்து தண்ணீரில் மூழ்கி கிடந்த கணேஷ் ராஜாவை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர் அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ஏற்கனவே கணேஷ் ராஜா இறந்து விட்டதாக கூறினர்.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து மீனாட்சிநாதபிள்ளை தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

உறவினர் வீட்டு கிரகபிரவேஷத்திற்கு வந்த இடத்தில் என்ஜினீயரிங் மாணவர் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை