தமிழக செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

என்ஜினீயரிங் மாணவர் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமையா புகலா (வயது 21). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்த ராமையா புகலா, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டினார்.

இதற்காக தன்னுடன் தங்கி இருந்த சக மாணவர்களிடம் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ராமையா புகலா, விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார் ராமையா புகலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை