தமிழக செய்திகள்

கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணுகுமார் (வயது 20). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

விஷ்ணுகுமார் செல்போனுக்கு அவரது பெற்றோர் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் எடுக்காததால் விடுதி காப்பாளருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து விஷ்ணுகுமாரின் அறைக்கு சென்று பார்க்கும்படி கூறினர்.

விடுதி காப்பாளர், விஷ்ணுகுமார் அறைக்கு சென்று அறையின் கதவை திறக்க முயற்சித்தபோது உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. பலமுறை தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் உள்ள மின்விசிறியில் விஷ்ணுகுமார் தூக்கில் பிணமாக தொங்கினார். மேலும் அவரது இடது கையில் கண்ணாடியை உடைத்து அறுத்து இருப்பதும் தெரிந்தது.

விஷ்ணுகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், விஷ்ணுகுமாரின் அறையை சோதனை செய்தனர். அதில் அவர் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், "காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வதாக" எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து