தமிழக செய்திகள்

ஆங்கில புத்தாண்டு: கோவை அரசு ஆஸ்பத்திரியில் 11 குழந்தைகள் பிறந்தன

புத்தாண்டு தினமான இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் 11 குழந்தைகள் பிறந்தன.

தினத்தந்தி

கோவை,

நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. பொதுமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணி முதல் தற்போது வரை 11 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் 7 ஆண் குழந்தைகளும், 4 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை