தமிழக செய்திகள்

சென்னை: புழல் ஏரியில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை....!

சென்னை புழல் ஏரியில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழந்து உள்ளனர்

தினத்தந்தி

செங்குன்றம்,

சென்னை செங்குன்றம் அருகே பம்மதுகுளம் பகுதியில் இன்று எழுவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக செங்குன்றம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வந்தனர்.

இதில் கலந்து கொண்ட 5-க்கும் மேற்பட்டோர் வெயில் காரணமாக பம்மதுகுளம் அருகே உள்ள புழல் ஏரிக்கு குளிக்க சென்று உள்ளனர்.

அப்போது குளித்துக் கொண்டிருந்த விஜயராஜ் (வயது 22), சாம் (20) ஆகிய இருவரும் ஏரியில் மூழ்கி உள்ளனர். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், அவர்களை காப்பற்ற முயன்று உள்ளனர். ஆனால் அதற்குள் விஜயராஜ், சாம் இருவரும் நீரில் மூழ்கி விட்டனர்.

பின்னர், இது குறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது புழல் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு வாலிபர்களின் உடலையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்குன்றம் போலீசார் உயிரிழந்த விஜயராஜ், சாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து