தமிழக செய்திகள்

தொழிற்பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்

தொழிற்பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் புதுக்கோட்டையில் 12-ந் தேதி நடக்கிறது

தினத்தந்தி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்காக வருகிற 12-ந் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொழிற்பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழிற்பழகுனர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் 10, 12, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களும் கலந்து கொண்டு தொழிற்பழகுனராக சேர்ந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள உள்ள மாணவ, மாணவிகள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். தொழிற்பழகுனராக தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும். தொழிற்பழகுனர் பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் சான்றிதழும் வழங்கப்படும் என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்