திருப்புவனம்,
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து காரில் வந்தார். அப்போது சிவகங்கை மாவட்ட எல்கையான திருப்புவனத்தில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.