தமிழக செய்திகள்

காதர் மொய்தீன் பேட்டி

இந்தியா முழுவதும் திராவிட மாடல் ஆட்சி பின்பற்றப்படுகிறது என்று காதர் மொய்தீன் கூறினார்.

தினத்தந்தி

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத்தலைவர் காதர் மொய்தீன் நேற்று பாபநாசம் அருகே பண்டாரவாடையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பின்பற்றப்படுகிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எப்போதும் தி.மு.க. கூட்டணியில் இருக்கும். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக எங்கள் கட்சி உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் அதே தொகுதியை கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியும் கேட்கும் எண்ணம் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதியிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.

அடுத்த மாதம் டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா மாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்தியா கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். இ்வ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து