தமிழக செய்திகள்

ஈரோடு: சோதனை சாவடி அருகே 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் - 15 பேர் காயம்

ஈரோட்டில் சோதனை சாவடி அருகே 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் புஞ்சைப் புளியம்பட்டியில் சோதனை சாவடி உள்ளது. இதனை அருகே வந்த லாரி, கார், ஆட்டோ உள்ளிட்ட 5 வாகனங்கள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் கார், ஆட்டோவில் இருந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். பின்னர், விபத்தில் காயம் அடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்