ஈரோடு,
ஈரோடு சத்தியமங்கலம் அருகே அக்கறைதந்தபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த வேன் மீது பைக் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் பைக்கை ஓட்டி வந்த 2 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர்.
அவர்களது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் கொண்டு சென்றுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த நபர்கள் இருவரும் சூளகிரி பகுதியை சேர்ந்த இளைஞர்களான வருண், அஜீத் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இதுபற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.