தமிழக செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற 7 வேட்பாளர்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 7 வேட்பாளர்கள் தலா ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளனர்.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27-ம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகளை எண்னும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 8 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 76,834 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 28,637 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 4,210, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 607 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 7 வேட்பாளர்கள் தலா ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. மேலும் 73-வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை