தமிழக செய்திகள்

ஈரோடு தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை - ஜி.கே. வாசன் பேட்டி

ஈரோடு தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை என்று ஜி.கே. வாசன் கூறினார்.

தினத்தந்தி

கும்பகோணம்,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போதுவரை 5 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இந்த நிலையில், தேர்தல் நிலவரம் குறித்து கும்பகோணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறவில்லை. பணநாயகம் முறையில் தான் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவு வரும் வரை பார்த்தால் தான் தெரியும். தற்போது திரிபுரா உள்ளிட்ட மாநில தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.

கியாஸ் விலை உயர்வு பொருளாதார ரீதியில் மக்களை பாதிக்கும். இதுபோல் தி.மு.க அரசும் தேர்தலில் கியாஸ்க்கு மானியம் வழங்கப்படும் என அறிவித்ததை செயல்படுத்த வேண்டும். கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்