தமிழக செய்திகள்

ஈரோடு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - ராணுவ வீரர் போக்சோவில் கைது

பவானி அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக லோகேஷ் என்ற ராணுவ வீரர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் ராணுவ வீரர் ஒருவர் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டார். பயந்து போன சிறுமி அவரை விட்டு தப்பித்துச்சென்று நடந்த சம்பவத்தை பற்றி கூறினார்.

அதைத்தொடர்ந்து பெற்றோர் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்) சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து ராணுவ வீரர் லோகேஷை கைது செய்தனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்