தமிழக செய்திகள்

அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார்... சீமானுக்கு ஈரோடு போலீசார் சம்மன்...!

வரும் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளைய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அருந்ததியர் மக்கள் குறித்து தவறாக பேசியதாக சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப்ட்டது.இதனை தொடர்ந்து சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் வரும் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளைய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் அந்த சம்மனை சீமான் பெற்றுக்கொண்டதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருந்ததியர் மக்கள் பற்றி தவறாக பேசிய வழக்கில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை