தமிழக செய்திகள்

கொலை வழக்கில் தாழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தாழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாத்தூரை சேர்ந்தவர் அன்பு ரோஸ் (வயது 47). தொழிலாளியான இவர் அதேபகுதியை சேர்ந்த கணேசன் (48) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்தார். இந்த கொலைவழக்கு தொடர்பாக அன்புரோசை வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை கூடுதல் மாவட்ட நீதிபதி கஜரா ஆர் ஜி ஜி விசாரித்து கணேசனை கொலை செய்த அன்புரோசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

SCROLL FOR NEXT