தமிழக செய்திகள்

எட்டயபுரம் நகர அ.தி.மு.க. சார்பில்அண்ணா பிறந்தநாள் விழா: கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பங்கேற்பு

எட்டயபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழாவில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

தினத்தந்தி

எட்டயபுரம்:

எட்டயபுரம் நகர அ.தி.மு.க சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா தூத்துக்குடி- கோவில்பட்டி மெயின் ரோட்டில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு நகர செயலாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், அவை தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, அங்குள்ள டாக்டர் சந்திரன் நினைவு கொடிக்கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் கார்ட்டன் பிரபு, சுப்புலட்சுமி சந்திரன், மகளிர் அணி செல்வி, சாந்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்