தமிழக செய்திகள்

”சாம்சன் செஞ்சுரியைப் பார்த்தாலும்...” மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை,

சென்னையில் நேற்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம்சனின் சதம், சிறந்த பீல்டிங், ஓவர்டனின் சிறப்பான பந்துவீச்சு என நேற்றைய போட்டி சென்னை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்துக்கு மத்தியில், நேற்றைய போட்டியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டேப்லெட்டில் கண்டுகளித்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”ஒரு அழுத்தமான பிரச்சாரத்துக்கு மத்தியில், விரைவான ஐபிஎல் இடைவேளை! சாம்சன் செஞ்சுரியைப் பார்த்தாலும், என்னோட பேவரட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல!” என அவர் தெரிவித்துள்ளார். தோனி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.