தமிழக செய்திகள்

‘எனக்கும்கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது; நான் அழுதேனா?’ -அமைச்சர் ஜெயக்குமார்

பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது. எனக்கும்கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது நான் அழுதேனா? என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை

36-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் மொழியைப் போன்ற தொன்மையான மொழி எதுவும் கிடையாது. 12-ம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தில் தமிழ்மொழியை குறைத்து பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எலக்ட்ரானிக், பேட்டரி கார்களுக்கு 5% வரியை குறைக்க கோரிக்கை வைத்தோம். மேலும் 61 பொருட்களுக்கு வரி குறைப்பு, வரி விலக்கிற்கான கோரிக்கை வைத்துள்ளோம்.

பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது. எனக்கும்கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது நான் அழுதேனா?, பொறுப்பில் இல்லை என்றவுடன் கட்சியையும் கட்சியில் இருப்பவர்களையும் விமர்சிப்பது ஏற்புடையது அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை