தமிழக செய்திகள்

கூட்டணி கட்சிகளுக்குள் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும்..கேபி முனுசாமி பரபரப்பு பேட்டி

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்.

சென்னை,

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார். அந்த அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெற்று மாவட்ட அளவில் இருக்கின்ற மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் செயல்படக்கூடிய உத்வேகத்தை அவர்களுக்கு அளித்திருக்கிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

தேர்தலில் கடுமையாக பாடுபட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுக்குள் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் தேசிய நலன் கருதி இந்த கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அதன்படி அவர் செயல்படுவார். அவருக்கு பின்னால் நாங்கள் இருப்போம். இவ்வாறு அவர் கூறி

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்