தமிழக செய்திகள்

ஏழுபேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காவல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்

ஏழுபேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காவல் அதிகாரிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.

தினத்தந்தி

சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காவல்துறை அதிகாரி அனுஷ்யா டெய்ஸிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் விடுதலை செய்தது. இதற்கு முன்னாள் காவல்துறை அதிகாரி அனுஷ்யா டெய்சி எதிர்ப்பு தெரிவித்தார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், யாரையும் விடுதலை செய்யக் கூடாது என்றும் அவர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அனுஷ்யாவை அநாகரிகமான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்து, தொலைபேசியில் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு