தமிழக செய்திகள்

கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி

சங்கரன்கோவில் அருகே கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளத்தைச் சேர்ந்தவர் கணபதி (வயது 60). முன்னாள் ராணுவ வீரர். இவர் சங்கரன்கோவிலில் சொந்த வேலையை முடித்து விட்டு மலையாங்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாட்டத்தூர் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் கணபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு