தமிழக செய்திகள்

ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி

ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, வரும் ஜனவரி 6, 7 ஆகிய தினங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை, 

கடந்த மாதம் 17,18-ம் தேதிகளில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, வரும் ஜனவரி 6, 7 ஆகிய தினங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு, ஜனவரி 7 அன்று நடக்க இருந்த டி.ஆர்.பி தேர்வை பிப்ரவரி 4 அன்று ஒத்தி வைத்தது போல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி ஜனவரி 6,7 அன்று நடத்த உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வையும் ஒத்தி வைக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன், என்று பதிவிட்டுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை