தமிழக செய்திகள்

கொந்தகை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இரும்பு வாள்-குவளைகள்

கொந்தகை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இரும்பு வாள்-குவளைகள் கண்டெடுக்கப்பட்டன.

தினத்தந்தி

திருப்புவனம், 

சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. கொந்தகையில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக 4 குழிகள் தோண்டப்பட்டன. இதில் மொத்தம் 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் ஏற்கனவே பல முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டன.

தாழிகளில் இருந்து எலும்பு துண்டுகள், மண்டை ஓடுகள் மற்றும் பல பொருட்கள் கிடைத்தன. தற்போது 2-வது குழியில் உள்ள முழுமையான ஒரு முதுமக்கள் தாழியை திறந்து ஆய்வு செய்ததில் கருப்பு, சிவப்பு நிற குவளைகளும், இரும்பினாலான வாளும் கண்டெடுக்கப்பட்டன. இந்த வாள் 40 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. மேலும், அது ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை