தமிழக செய்திகள்

பாம்பன் கடலில் படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பாம்பன் கடலில் படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த பாக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு, பாம்பன் தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 5 மணி அளவில் அந்த படகில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

உடனடியாக மீனவர்கள் பல்வேறு படகுகளில் சென்று தீயை அணைத்தனர். ஆனால் படகு முழுமையாக எரிந்துவிட்டது. படகில் தீப்பற்றியது எப்படி என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலில் படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு உண்டானது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்