தமிழக செய்திகள்

முதலமைச்சரை வரவேற்க காத்திருந்த கூட்டத்தில் துப்பாக்கியுடன் நின்ற நபரால் பரபரப்பு

பேரணாம்பட்டில் முதலமைச்சரை வரவேற்க காத்திருந்த கூட்டத்தில் துப்பாக்கியுடன் நின்ற நபரால் பரபரப்பு நிலவியது.

தினத்தந்தி

பேரணாம்பட்டு,

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 'வெற்றி நடைபோடுகிறது தமிழகம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் 5-ம் கட்டமாக இன்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதனைத்தொடர்ந்து வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் முதலமைச்சரை வரவேற்க காத்திருந்த கூட்டத்தில் துப்பாக்கியுடன் நின்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் நின்ற மர்மநபரை போலீசார் பிடித்தனர். இதனைத்தொடர்ந்து மர்ம நபரை பேரணாம்பட்டு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து