தமிழக செய்திகள்

திறந்தவெளியில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்து, மாத்திரை

பாளையம்பட்டி துணை மின் நிலையம் அருகே திறந்தவெளியில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை, 

பாளையம்பட்டி துணை மின் நிலையம் அருகே திறந்தவெளியில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காலாவதியான மருந்து

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி துணை மின் நிலையம் அருகில் திறந்த வெளியில் மர்மநபர்கள் காலாவதியான மருந்து, மாத்திரைகளை கொட்டி சென்றுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாத்திரை அட்டைகள், மருந்து பாட்டில்கள் இங்கு குவிந்து காணப்படுகின்றன. அந்த அனைத்து மருந்து அட்டைகளிலும், மருந்து பாட்டில்களிலும் தமிழ்நாடு அரசு என எழுதப்பட்டுள்ளது.

திறந்தவெளியில் இதுபோன்று காலாவதியான மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொற்றுநோய் பரவும் அபாயம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி துணை மின் நிலையம் அருகில் திறந்த வெளியில் காலாவதியான மருந்து, மாத்திரைகளை திறந்தவெளியில் கொட்டி சென்று உள்ளனர். அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் யாரேனும் தெரியாமல் இந்த மருந்து, மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து நேரிடும்.

மேலும் திறந்தவெளியில் காலாவதியான மருந்துகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இவ்வாறு அஜாக்கிரையாதையாக மருந்து, மாத்திரைகளை திறந்த வெளியில் கொட்டி சென்றவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை