தமிழக செய்திகள்

ஈரோடு அருகே பாதாள சாக்கடை பணியின் போது வெடி விபத்து - 2 பேர் படுகாயம்

பாதாள சாக்கடை பணிகளின் போது, பாறையை உடைப்பதற்காக வைக்கப்பட்ட வெடி வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் நடைபெற்று வந்த பாதாள சாக்கடை பணிகளின் போது, பாறையை உடைப்பதற்காக வைக்கப்பட்ட வெடி வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் அங்கு பாதாள சாக்கடை பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களான சங்கர், ராமராஜ் ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவ்விருவரையும் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து ஈரோடு வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், பாறைகளை தகர்ப்பதற்காக வைக்கப்பட்ட வெடிகள் எதிர்பாராத விதமாக வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு