தமிழக செய்திகள்

நாமக்கல்லில் இருந்து கத்தார் நாட்டிற்கு 1½ கோடி முட்டை ஏற்றுமதி

உலக கால்பந்து போட்டி: நாமக்கல்லில் இருந்து கத்தார் நாட்டிற்கு 1½ கோடி முட்டை ஏற்றுமதி.

தினத்தந்தி

 நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த முட்டைகள் தமிழகம் மற்றுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது கத்தார் நாட்டில் உலக கால்பந்து போட்டி நடைபெறுவதால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து 4 மடங்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேலும் முட்டை கொள்முதல் விலையும் அதிகரித்தது. கத்தாருக்கு மாதம் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த தகவலை முட்டை ஏற்றுமதியாளரும், நாமக்கல் கால்நடை விவசாயிகள் வர்த்தக சங்க பொதுச்செயலாளருமான பி.வி.செந்தில் தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை