தமிழக செய்திகள்

எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் ரத்து

அரக்கோணம் யார்டு பகுதியில் பாமரிப்பு பணிகள் நடைபெற்றதால் எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டது.

தினத்தந்தி

ரெயில்கள் ரத்து

அரக்கோணம் ரெயில் நிலைய யார்டு பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற்றது. ரெயில்வே அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று காலை அரக்கோணத்தில் இருந்து சென்னை, சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி செல்லும் புறநகர் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டது.

அதேப்போல், பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ், கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடியில் நிறுத்தப்பட்டது. மறுமார்க்கத்தில் காட்பாடியில் இருந்து இந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்றது.

எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் காலையில் சென்றது. பின்னர் திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மறுமார்க்கத்திற்கு அரக்கோணத்தில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்பட்டது. அரக்கோணம், திருத்தணியில் இருந்து சென்னைக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரையிலான 5 புறநகர் ரெயில், 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது