தமிழக செய்திகள்

ஆந்திராவில் இருந்து சென்னை வரும்போது என்ஜின் பழுதால் நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில் - மின்சார ரெயில்கள் சேவை பாதிப்பு

ஆந்திராவில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பழுதால் பொன்னேரி அருகே நடுவழியில் நின்றது. இதனால் கும்மிடிப்பூண்டி - சென்னை சென்டிரல் மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் சேவை பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

ஆந்திர மாநிலம் பித்தரகுண்டாவில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது கும்மிடிப்பூண்டி வழியாக கவரப்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்த நிலையில் திடீரென எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜினில் பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்றது.

இதனால் சென்னை செல்லக்கூடிய மின்சார ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழுதான என்ஜினை சரி செய்யும் முயற்சி ஈடுபட்டனர். ஆனால் பழுது சரி செய்ய முடியாததால் ரெயிலை மேதுவாக இயக்கி பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினர்.

இதனால் கும்மிடிப்பூண்டி - சென்னை சென்டிரல் மார்க்கத்தில் சென்ற அனைத்து மின்சார ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் 30 நிமிடம் கால தாமதமாக மின்சார ரெயில் ஒன்றன் பின் ஒன்றாக இயங்கின. பழுதான எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பழுது பார்க்கபட்டு ஒரு மணி நேரம் கால தாகதமாக சென்னை சென்றது. நேற்று முன்தினம் பராமரிப்பு ரெயில் என்ஜின் தடம் புரண்ட நிலையில் நேற்று எக்ஸ்பிரஸ் ரெயில் பழுதான சம்பவம் பயணிகளிடம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை