கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சீரமைப்பு பணியால் மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு.. தாம்பரத்தில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரெயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16866), கொல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22662), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16752) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16865) நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 15-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.

* எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.

* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22661), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.

* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16751), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.42 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.

* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), மேற்கண்ட தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து