தமிழக செய்திகள்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பில் சேர கால நீட்டிப்பு - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பில் சேர கால நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பில் சேர கால நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழில் வணிகத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும், தொழில்நுட்ப கல்வித்துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகள் ஆகியவற்றுக்கான முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இதுவரை 16 ஆயிரத்து 940 மாணவர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.

இதற்கு விண்ணப்பிக்க நேற்று (4-ந்தேதி) கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கூடுதல் அவகாசம் கோரி மாணவர்கள் கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்று, இணையதள விண்ணப்பப்பதிவு வருகிற 20-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு