தமிழக செய்திகள்

பேரறிவாளனுக்கு 8-வது முறையாக பரோல் நீட்டிப்பு

பேரறிவாளனுக்கு 8-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுநீரகத் தொற்று, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக அவருக்கு பரோல் வழங்க வேண்டி அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் 28-ந்தேதி ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்குச் சென்றார். வீட்டில் இருந்தபடி சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு பேரறிவாளன் சிகிச்சை எடுத்து வந்தார்.

அவரது தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் பரோல் காலம் முடியும் தருவாயில் மீண்டும் பரோல் நீட்டிக்க கோரி தமிழக அரசுக்கு மனு அளித்து வந்தார். அதன்படி இதுவரை 7 முறை பரோல் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மேலும் பரோல் நீட்டிக்க மனு அனுப்பி இருந்தார். அதனை பரிசீலித்த தமிழக அரசு பேரறிவாளனுக்கு 8-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு