தமிழக செய்திகள்

மடிப்பாக்கத்தில் பெண்களிடம் கத்திமுனையில் நகை, பணம் பறிப்பு

மடிப்பாக்கத்தில் பெண்களிடம் கத்திமுனையில் நகை, பணம் பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார் நகர் பிரதான சாலையில் மளிகைக்கடை நடத்தி வருபவர் சாய்ராபானு (வயது 32). இவர் நேற்று முன்தினம் கடையில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், கத்தியை காட்டி மிரட்டி கல்லாவில் உள்ள பணத்தை எடுத்து கொடுக்கும்படி கேட்டனர். இதில் பயந்து போன சாய்ராபானு, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்து கொடுத்தார்.

அதே போல் மடிப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கண்ணாடிக்கடையில் பணியாற்றும் பாண்டி லட்சுமி (23) என்பவர் தனியாக இருந்தபோது, அங்கு வந்த 2 பர் கத்தியை காட்டி மிரட்டி பாண்டி லட்சுமி அணிந்திருந்த 1 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.

இந்த சம்பவங்கள் குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து