தமிழக செய்திகள்

பெண்களிடம் நகை-பணம் பறிப்பு

பெண்களிடம் நகை-பணம் பறிக்கப்பட்டது.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் சித்ரா(வயது42). மாற்று திறனாளியான இவரிடம் நேற்று வீட்டிற்கு வந்த மர்ம நபர் தன்னை ஒரு நாட்டு வைத்தியர் என்றும், சித்ராவின் காலை உடனடியாக சரி செய்வதற்கு தன்னிடம் மருந்து உள்ளதாகவும் கூறி உள்ளார். அதற்கு ரூ.13 ஆயிரம் செலவு ஆகும் என கூறியுள்ளார். இதனை நம்பிய சித்ரா எப்படியாவது தனது கால் குணமானால் போதுமே என நினைத்து ரூ.13 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். அதன்பிறகு அந்த மோசடி ஆசாமி மாந்திரீகம் செய்ய வேண்டும் அதற்கு சித்ரா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொடுங்கள் என கேட்டுள்ளார். இதை நம்பிய சித்ரா ரூ.13 ஆயிரம் பணத்தையும், தான் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியையும் கழட்டிக் கொடுத்துள்ளார். இதை வாங்கிய அந்த மர்ம ஆசாமி வாசலில் மருந்து வைத்துள்ளேன் எடுத்து வருகிறேன் என கூறிவிட்டு தான் தயாராக வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுள்ளார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த சிவகாமி என்பவரிடம் உடல் வலியை போக்குவதற்கு மருந்து தருவதாக கூறி ரூ.11 ஆயிரத்தை வாங்கி உள்ளார். அதையும் பெற்றுக்கொண்டு ரூ.50 மதிப்புள்ள ஒரு மருந்து பாட்டிலை கொடுத்து விட்டு தப்பி உள்ளார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் வி.களத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பெண்களை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மோசடி நாட்டு வைத்தியரை போலீசார் தேடி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்