தமிழக செய்திகள்

இட்லி கடைக்காரரிடம் மாமூல் கேட்டு பணம் பறிப்பு

பண்ருட்டி அருகே இட்லி கடைக்காரரிடம் மாமூல் கேட்டு பணம் பறித்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள பாப்பன்கொல்லையை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 55). இவர் சொரத்தங்குழி பஸ் நிறுத்தம் அருகில் இட்லி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று சொரத்தங்குழியை சேர்ந்த பிரபல ரவுடியான மாம்பழம் என்ற அசோகன், பழனிவேலிடம் மாமூல் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்தார். இதில் ஆத்திரமடைந்த அசோகன், பழனிவேலை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரது சட்டைப் பையில் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து ரவுடி அசோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை