தமிழக செய்திகள்

ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் அரிவாளை காட்டி பணம் பறிப்பு

ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் அரிவாளை காட்டி பணம் பறிக்கப்பட்டது

தினத்தந்தி

திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்து காலை இவர் வயர்லெஸ் ரோட்டில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அரிவாளை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.1000-ஐ பறித்து சென்றார். இது குறித்து விஜயகுமார் ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பணத்தை பறித்து சென்றது ஏர்போர்ட் அண்ணா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிவனேசன் (28) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து அரிவாளை பறிமுதல் செய்ததுடன், ரூ.500-ஐ மீட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்