தமிழக செய்திகள்

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இன்று முதல் முககவசம் கட்டாயம் - தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம்

தமிழகம் முழுவதும் இன்று முதல் முககவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று முதல் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இன்று முதல் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படது.

இதன் மூலம் வாகனங்களுக்கு பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களால் தொற்று பரவும் அபாயத்தை குறைக்க முடியும் என பெட்ரோலிய வணிகர் சங்கம் நம்புகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது