தமிழக செய்திகள்

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி, முக கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் மக்களிடையே எடுத்துரைத்ததன் காரணமாக தான் சென்னை நேதாஜி நகர், திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடிந்தது. மேலும் பாதிப்பு அதிகம் இருக்கும் கோடம்பாக்கம், பெருங்குடி, பழவந்தாங்கல் போன்ற பகுதிகளிலும் பொது மக்களிடம் இது குறித்து அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏற்படும் கொரோனா இறப்புகளை தடுக்க டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் எங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதன்படி கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என பொது மக்களுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்