கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஒரு வாரத்திற்குள் பட்டா மாறுதல் செய்யும் வசதி - தமிழக அரசு தகவல்

ஒரு வாரத்திற்குள் பட்டா மாறுதல் செய்யும் வசதி தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நிலத்தை வாங்கும் போதும் விற்கும் போதும் உரிய ஆவணங்கள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் பட்டா கிடைக்கும் வசதி தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் சொத்து விவரங்கள் அடிப்படையில் தானியங்கி முறையில் ஆன்லைன் பட்டா மாறுதல் நடைபெறுகிறது. இதன் மூலம் ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையில் வாங்கப்படும் சொத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் இது தொடர்பான தகவல்களை பதிவுத்துறை வருவாய்துறைக்கு தெரிவிக்கிறது. இந்த தகவலின் அடிப்படையிலேயே உரிய நபருக்கு காலதாமதம் இன்றி பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக பதிவுத்துறையால் தொடங்கப்பட்ட ஸ்டார் மென்பொருள் மற்றும் வருவாய் துறையின் தமிழ் நிலம் மென்பொருள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து