தமிழக செய்திகள்

திசையன்விளை அருகே கோஷ்டி மோதல்; 8 பேர் மீது வழக்கு

திசையன்விளை அருகே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திசையன்விளை:

திசையன்விளை அருகே அழகப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஈனமுத்து (வயது 40). அதே ஊரில் நடுத்தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் சுடலை (வயது 28). இவர்களுக்குள் தோட்டத்தில் ஆடு, மாடுகளை மேய்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது சுடலை, கருப்பசாமி மனைவி பார்வதி, சுடலை மனைவி முத்துலெட்சுமி, பானு, கருப்பகோனார் ஆகியோர் சேர்ந்து தன்னை தாக்கியதாக ஈனமுத்து திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இதேபோல் ஈனமுத்து, கருப்பன், மகேஷ் ஆகியோர் தன்னை தாக்கியதாக சுடலை புகார் அளித்தார். இதையடுத்து திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார், இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்