தமிழக செய்திகள்

போலி டாக்டர் கைது

வாணியம்பாடி அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி டாக்டர்களை ஒழிக்க கலெக்டர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனை டாக்டர் தன்வீர் உள்ளிட்ட குழுவினர் வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் குகன் (வயது 26) என்பவர் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலி டாக்டர் குகனை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் இருந்த மருந்து, மாத்திரைகளை மருத்துவக்குழுவினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை