தமிழக செய்திகள்

அமைச்சர் பெயரில் போலி கடிதம்: பா.ஜ.க. நிர்வாகிக்கு முன்ஜாமீன்

அமைச்சர் பெயரில் போலி கடிதம்: பா.ஜ.க. நிர்வாகிக்கு முன்ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு.

தினத்தந்தி

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரகுறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்தது போல ஒரு கடிதம் சமூக ஊடங்களில் வெளியானது. இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அமைச்சர் பெயரில் வெளியான இந்த போலி கடிதத்தை பா.ஜ.க., தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள தொடாபு பிரிவு தலைவர் நிர்மல்குமார் தயாரித்து வெளியிட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் அழைத்து கடந்த 8-ந் தேதி விசாரித்தனர். இந்தநிலையில், தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நிர்மல்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரருக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்