தமிழக செய்திகள்

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் -எல்.கே.சுதீஷ்

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை

கூட்டணிக் கட்சியினருக்கு பாஜக தலைவர் அமித்ஷா டெல்லியில் விருந்து அளித்தார். அதில் கலந்து கொண்டு விட்டு தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் இன்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எல்.கே.சுதீஷ் கூறியதாவது:-

கடந்த முறை தேர்தலின் போது அதிமுக தோல்வி அடையும் என வெளியான கருத்து கணிப்புகள் பொய்யானது போலவே, இந்த முறையும் கருத்து கணிப்புகள் பொய்யாகி அதிமுக கூட்டணி வெற்றி பெறும். மத்திய அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறுமா என்பது தேர்தல் முடிவு வெளியான பின்னரே தீர்மானிக்கப்படும். கூட்டணி கட்சி தலைவர்கள் சேர்ந்து முடிவு செய்வர் என கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...