கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

குடும்ப தகராறில் பயங்கரம்: மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகள்

நெல்லை அருகே குடும்ப தகராறில் மாமியாரை அரிவாளால் வெட்டிக்கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மனைவி வெள்ளையம்மாள் (90 வயது). இந்த தம்பதிக்கு பழனி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் அருணாச்சலமும், பழனியும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், வெள்ளையம்மாள், தனது மருமகள் வசந்தா (60 வயது) மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

நேற்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், இந்த கொலை தொடர்பாக அவரது மருமகள் வசந்தாவை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது குடும்ப தகராறில் வெள்ளையம்மாளை மருமகள் வசந்தா அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வசந்தாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.