தமிழக செய்திகள்

அடையாறில் பீகாரைச் சேர்ந்த குடும்பம் கொலை: வெறுப்பைப் பரப்பாதீர் - தமிழக அரசு

இருமாநிலங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும்படி செய்திகளைப் பகிர்வது குற்றம் என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னையில் பீகாரைச் சேர்ந்த கவுரவ்குமார் மற்றும் அவரது மனைவி, குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், வடமாநிலத்தவர்கள் மீதுள்ள வெறுப்பால் கொலை நடந்ததாக ஆதாரமற்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்றும் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பீகார் மாநிலத்தில் இருந்து வேலைக்காக சென்னை வந்த கவுரவ்குமார் மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்த சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிகந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட 5 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், வடமாநிலத்தவர்கள் மீதுள்ள வெறுப்பால் கொலை நடந்ததாக ஆதாரமற்ற வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இருமாநிலங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும்படி செய்திகளைப் பகிர்வது குற்றம். வெறுப்பைப் பரப்பாதீர்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்